Latest Movie :
Home » » Shaun of the Dead

Shaun of the Dead

{[['']]}

பதட்டத்தோடு நடுங்கிக்கொண்டே பார்க்கவேண்டிய ஒரு படத்தை விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே பார்க்கும் அனுபவம் அட்டகாசமானது. பயத்தின் உச்சத்தில் இருக்கும்போது இயல்பாகவே அந்த பயம் விலகி, ஜாலியாக சிரிக்கவேண்டும் என்றுதான் உள்மனம் விரும்பும். அந்த அனுபவத்தை திரைப்படங்களில் புகுத்தும்போது அனுபவம் அட்டகாசமாகிறது என்பது Zombieland படத்தின் இயக்குனர்கள் Rhett Reese & Paul Wernick இன் விதி (நன்றி - ராஜேஷ்) அப்பிடி ஒரு அனுபவத்தை கொடுக்கிறது Shaun of the Dead. படம் ஹாலிவூட்டின் வழக்கமான ஸோம்பி கேட்டக்கரிதான். ஆனால் பயப்பிடுத்த முயற்சிக்காமல் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பதில்தான் தனித்திருக்கிறது. 

தம்மை சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் ஸோம்பிக்களாக மாறிக்கொண்டிருப்பது தெரியாமல் shaun அவர்களை கடந்து கடைக்கு சென்று வருவதிலிருந்து, ஸோம்பியை தாக்க ரெக்கோட் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டு தமக்கு பிடிக்காத ரெக்கோட்களை வீசுவது, கடிக்க வரும் ஸோம்பியை நிமிர்ந்து பார்க்காமல் சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு நகர்வது என படம் முழுக்க வெடி சிரிப்பு. 

அவசியம் பாருங்கள். வெட்டு, குத்து, தக்காளிச்சட்னி காட்சிகளும் உண்டு. ஆனால் அருவருப்புக்கு பதில் சிரிப்பு 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. My REELS - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger